Main Menu

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழப்பு!

ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்தமை பதிவு செய்த உலகின் முதல் நாடாக அமெரிக்கா திகழ்கிறது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் கடந்த 24 மணி நேரத்தில் 2,108 பேர் இறந்துவிட்டனர் என்றும் இதுவரை 502,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

இதேவேளை உலகளவில் அதிக கொரோனா வைரஸ் இறப்புகளைக் கொண்ட நாடாக அமெரிக்கா விரைவில் இத்தாலியை விஞ்சிவிடும் என்றும் கூறப்படுகின்றது.

இருப்பினும் வெள்ளை மாளிகையின் கோவிட் -19 செயலணியின் வல்லுநர்கள், இந்த வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் உச்சத்தை எட்டவில்லை என கூறியுள்ளனர்.

100,000 இறப்புகள் என்ற ஆரம்ப கணிப்புகளை விட அமெரிக்கா குறைந்த இறப்பு எண்ணிக்கையைக் காணும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதுவரை கொரோனா வைரஸினால் அமெரிக்காவில் 502,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18,747 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27,314 பேர் குணமடைந்துள்ளதாகவும் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...