Main Menu

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எகிப்திய புராதனச் சிலை ஏலம்!

எகிப்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பினையும் மீறி புராதனச் சிலை ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

300 ஆண்டுகள் பழைமையான எகிப்து அரசர் துடேங்காமனின் சிலையே பிரித்தானியாவில் 59.7 இலட்சம் டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டிகக் கல்லில் செதுக்கப்பட்ட அந்த சிலையை தனியாரிடமிருந்து 30 இலட்சம் பவுண்டுக்கு வாங்கிய லண்டனின் கிறிஸ்டீ ஏல மையம், அதனை ஏலத்துக்கு விட்டது.

எனினும், அந்தச் சிலையை வாங்கியவரின் பெயர் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பழமைவாய்ந்த குறித்த சிலை அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டிய வரலாற்றுச் சின்னம் என்பதால், அதனை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என எகிப்து அரசும், வரலாற்று ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும், இந்த ஏல விற்பனை நடைபெற்றுள்ளது.

பகிரவும்...