Main Menu

ஒரே நாளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று – ஆசிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா

ஆசியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், ஆசிய நாடுகளிலும் பெரும் மனித அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆசிய நாடுகளைப் பொறுத்தமட்டில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதேநேரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை அண்மிக்கிறது.

ஆசிய நாடுகளில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது.

அதனையடுத்து ஈரான், துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன என்பதுடன், இலங்கை 31ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக நேற்று ஒரேநாளில் 16 ஆயிரத்து 870இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 72 ஆயிரத்து 985இற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் அங்கு இந்த வைரஸ் தொற்றினால் நேற்று 424 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 907 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில், 2 இலட்சத்து 71 ஆயிரத்து 688 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகராஷ்டிரா, டெல்லி, தமிழகம் ஆகியன விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...