Main Menu

கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை – ஐ.நா.

கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

உலகில் கொரோனா வைரஸின் தாக்கம் பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பரவலின் ஆரம்பத்திலேயே இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எழுந்துள்ள மிகப் பெரிய சர்வதேச சவால் என்றும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள நாடுகளிடையே உலகளாவிய போர் நிறுத்தம் வேண்டும் என ஏற்கனவே அன்டோனியோ குட்ரெஸ் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பிரபல ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளதோடு, கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து ஐரோப்பா, அமெரிக்கா என தற்போது தென் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லையென கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் கொரோனாவுக்கு எதிராக நாடுகள் ஒன்றிணைந்து போராடுவது மட்டுமன்றி, சிகிச்சைகள், பரிசோதனை வழிமுறைகள், தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் என்பவற்றிலும் நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பகிரவும்...