Main Menu

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும்- கம்மன்பில

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “இம்முறை அதிகாரம் தனி கட்சியொன்றுக்கு மாத்திரம் கிடைக்கவில்லை. 15 கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணிக்கே அதிகாரம் கிடைத்துள்ளது.

நாம் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்றால், கட்சிகளை கைவிட்டு யாருமே பொது ஜன பெரமுன உறுப்பினராக இல்லாமலிருந்திருக்க முடியும்.

எனினும் எம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளதன் காரணமாகவே வெவ்வேறு கட்சிகளாக கூட்டணியமைத்துள்ளோம். வெவ்வேறு நிலைப்பாடுகளில் இணக்கம் காணக்கூடிய விடயங்களே சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் சுபீட்சத்தின் நோக்கிற்கு அனைவரும் இணங்குகின்றோம். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. எனினும் அதன் வெளிப்புற தன்மை தொடர்பில் தொடர்ச்சியாக எமக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

பத்து இலட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கூட்டணியில் தினமும் முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அது புதுமைப்பட வேண்டிய காரணியல்ல.

குறித்த முரண்பாடுகள் பரந்தளவில் விவாதத்திற்கு உட்படும்போது அரசாங்கத்திற்குள் ஜனநாயகம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன்.

எனவே இவை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கும் புரிய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...