Main Menu

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதாக நம்புகிற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் முடக்கநிலை மற்றும் பரவலான எல்லை மூடல்களுக்கு மத்தியில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய விரும்பும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய எல்லை நிறுவனமான ஃபிரான்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

மே மாதத்தில், கிட்டத்தட்ட 4,300 சட்டவிரோத எல்லைக் கடப்புகள் இருந்ததாக ஃபிரான்டெக்ஸின் புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி ஃபன்கே ஊடக குழுமத்தின் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன.

இதன் விளைவாக, கண்டத்தின் முக்கிய இடம்பெயர்வு பாதைகளில் போக்குவரத்து ஏப்ரல் மாதத்தில் சாதனை அளவை எட்டியது.

பகிரவும்...