Main Menu

பாகிஸ்தானின் அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் வெறுப்புணர்வை கொண்டது: பிரான்ஸ் கண்டனம்!

பாகிஸ்தானின் அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் வெறுப்புணர்வை கொண்டது என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் மனித உரிமைகள் அமைச்சரான ஷிரீன் மசாரி, ‘ஜேர்மனியின் நாஜிக்கள் யூதர்களை எவ்வாறு நடத்தினார்களோ அது போல இமானுவேல் மக்ரோன் முஸ்லீம்களை நடத்துவதாக சாடியிருந்தார்.

இந்தநிலையில் இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘பாகிஸ்தானின் அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் வெறுப்புணர்வை கொண்டது. அப்பட்டமான பொய்களை உள்ளடக்கியது.

வெறுப்பு மற்றும் வன்முறை சித்தாந்தங்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்து உள்ளது. பாகிஸ்தானின் கருத்தை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். பாகிஸ்தான் தனது தவறை திருத்திக்கொண்டு பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்ப வேண்டும்’ என தெரிவித்துள்ளது.

முகமது நபிகள் பற்றிய கேலிச்சித்திரம் விவகாரத்தில் பிரான்ஸ் நடந்து கொண்ட விதத்தால், துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லீம் நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன.

பகிரவும்...