Main Menu

எத்தியோப்பியா பிரதமருக்கெதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் 67 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலிக்கெதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் 67 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக கடந்த 2-4-2018ஆண்டு பொறுப்பேற்ற அபி அஹமது அலி அண்டைநாடான எரிட்ரேயா ஜனாதிபதியுடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும் எத்தியோப்பியா நாட்டு மக்களின் வாழ்வாதரத்தை வளப்படுத்தவும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும் ஆற்றிய அரும்பணிக்காக அவருக்கு கடந்த வாரம் உயரிய நோபல் பரிவு அறிவிக்கப்பட்டது.

இவ்வாறனதொரு நிலையில், பிரதமர் அபி அஹமது அலிக்கெதிரான போராட்டத்தில் இவ்வாறு உயிர்கள் காவுக் கொள்ளப்பட்டிருப்பது, அவர் மீதான விமர்சனங்களையும், அழுத்தங்களையும் அதிகரித்துள்ளது.

எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி சர்வதிகார போக்கை கடைப்பிடிப்பதாக கூறி, ஆயிரக்கணக்கான மக்கள் எத்தியோப்பியன் தலைநகர் அடிஸ் அபாபா மற்றும் பல பிராந்திய நகரங்களின் வீதிகளில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுயாதீன ஊடக வலையமைப்பின் நிறுவனரான ஜாவர் முகமது என்பவரால் கடந்த 2 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் இரு தரப்பு பழங்குடி குழுக்கள் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் சிறியரக ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளால் தாக்கி கொண்டனர். இந்த வன்முறை சம்பவங்களின் போதே, 67 பேர் இவ்வாறு உயிழந்துள்ளனர்.

இப்போரட்டம் குறித்து ஜாவர் முகமது கூறுகையில், ‘அஹமது ஆரம்பகால சர்வதிகார போக்கை கடைப்பிடிக்கும் அரசியலை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறார்.

அவர் ஆட்சிக்கு வர உதவியாக இருந்த அவரது மிக நெருங்கிய கூட்டணியினர் கூட அவரது சில கொள்கைகள் மற்றும் ஆலோசனைகளை ஏற்க மறுத்து உள்ளனர். இந்நிலையில் கூட அவரது அரசியல் நடவடிக்கைகள் சர்வாதிகார போக்கை நோக்கி செல்கின்றன.

அந்நாட்டில் அடுத்த வருடம் மே மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன்’ என கூறியுள்ளார்.

பகிரவும்...