Main Menu

சீனா – பிரேசில் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சோனாரோ சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு பீஜிங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, முதன்முறையாக சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பொல்சோனாரோவுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பளித்தார்.

இதன்பின்னர் இடம்பெற்ற சந்திப்பில் சீன ஜனாதிபதி கூறுகையில், “சீனாவும் பிரேசிலும் கிழக்கு, மேற்கு பிராந்தியத்தின் வளர்ந்துவரும் முக்கிய நாடுகளாகும்.

இரு நாடுகளும் தூதுவ முறை உறவை உருவாக்கிய 45 ஆண்டுகளில், பரஸ்பர மதிப்பு, சமத்துவம், பரஸ்பர நலன் என கூட்டாக வெற்றி பெறுவது ஆகியவற்றில் திடமாக செயற்படுகிறோம்” என தெரிவித்தார்.

இதனிடையே, உலகளவில் சீனா மாபெரும் வளர்ச்சி குறித்து பொல்சோனாரோ கருத்து தெரிவித்தார். அத்துடன், பிரேசிலின் முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளியாக சீனா உள்ளது எனவும், சீனாவின் வல்லரசு தகுதிநிலையில் பிரேசில் கவனம் செலுத்தி வருகின்றது என்றும் அவர் கூறினார்.

பகிரவும்...