Main Menu

எகிப்தில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னைய மனித உடல்கள் -எலிகள் கண்டெடுப்பு

எகிப்தில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட எலிகள், வேறு சில விலங்குகள் மற்றும் இரண்டு மனிதர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தின் சஹோகே என்னும் நகரத்தின் பூமிக்கடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறையில் இவை கிடைத்துள்ளன.

இரண்டு மனித மம்மிகளின் உடலை சுற்றி எலிகள் உள்பட மற்ற விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் காணப்படுகின்றன எனவும் இவை புதைக்கப்பட்டுள்ள அறையிலுள்ள சுவர் முழுவதும் இறுதிச் சடங்குகள் குறித்த ஓவியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான கல்லறையான இது எனவும் முற்காலத்தில் எகிப்தின் உயரதிகாரியாக இருந்த டுட்டு மற்றும் அவரது மனைவிக்கான ஓய்வெடுக்கும் பகுதியாக அது விளங்கியதாகவும் தொல்லியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாலைவன பகுதியான சஹோகே இனி சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நாட்டின் மற்றொரு பகுதியாக உருவெடுக்கும் எனவும் அந்நாட்டின் தொல்லியல் துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது

பகிரவும்...