Main Menu

மீண்டும் பிரதமரானால் வெஸ்ட் பாங்க்கிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும்

தான் மீண்டும் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பாங்க் பகுதியிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதியளித்துள்ளார்.

இஸ்ரேலில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் நெதன்யாகு  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த குடியேற்றங்கள் சட்டவிரோதமானவையாக இருந்தபோதிலும், இஸ்ரேல் அந்த கருத்துடன் முரண்பட்டுக் காணப்படுகின்றது.

வெஸ்ட் பாங்க் பகுதியிலுள்ள குடியேற்றங்களில் சுமார் நான்கு லட்சம் யூதர்களும், 25 லட்சம் பாலத்தீனியர்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...