Main Menu

உயிர் நீத்த உறவுகளுக்கு முள்ளி வாய்க்காலில் மலர் தூவி அஞ்சலி!

இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொள்கை பிரகடன அறிக்கை வெளியிட்டப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது சமூக இடைவெளி பின்பற்றப்பட்டிருந்ததாக ஆதவனின் பிராந்திய ஊடகவியலாளர் குறிப்பிட்டார்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வு குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு நேற்றைய தினம் தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டிருந்ததாக ஏற்பாட்டு குழுவினர் முன்னரே அறிவித்திருந்தனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்கவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் நிளைவேந்தலை அனுஸ்டிக்க இன்று(திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில், வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் வெவ்வேறு வாகனங்களில், அங்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

இதன்போது, கேரதீவில் சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...