Main Menu

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்!

தெலுங்கானா அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள எண்.317 சட்ட மசோதாவில் மாற்றங்களை செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் பண்டி சஞ்சய் உட்பட 5 பேரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இடம் மாற்றத்திற்காக தெலுங்கானா அரசு, எண்.317 சட்டமசோதாவை கொண்டு வந்தது.

இந்நிலையில் குறித்த சட்டமசோதா, அரசு ஊழியர்களை பாதிக்கும். ஆகவே இதில் சில மாற்றங்களை செய்ய வலியுறுத்தி, பா.ஜ.க மாநில தலைவர் பண்டி சஞ்சய் தலைமையில் பா.ஜ.க.வை சேர்ந்த மேலும் 12 பேர் கரீம் நகரில் எம்.பி.அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சஞ்சய் உட்பட 5 பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரீம் நகர் பொலிஸார் கைது செய்து, நேற்று கரீம் நகர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, இவர்கள் பிணை கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

ஆனால், அவர்களின் பிணை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...