Main Menu

உக்ரைனின் முன்னாள் முக்கிய அதிகாரி அமெரிக்காவின் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்!

உக்ரேனிய முன்னாள் பொது அதிகாரி இகோர் கொலொமோய்ஸ்கி (Igor Kolomoisky) அமெரிக்காவிற்குள் நுழையத் தகுதியற்றவர் என்ற தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர், பதவியில் இருந்த காலத்தில் குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியே அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆன்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவின் எல்லைக்கு அண்மித்துள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk) மாகாணத்தின் ஆளுநராக இருந்த கொலோமோயிஸ்கி, தனது அலுவலகத்தை  தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், இந்தக் குற்றச்சாட்டு கொலோமோயிஸ்கி பதவியில் இருந்தபோதான செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டாலும், உக்ரைனின் ஜனநாயக செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கான கொலோமோயிஸ்கியின் தற்போதைய மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும் கவலை தெரிவிப்பதாக ஆன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

இது, உக்ரைனின் எதிர்காலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டு மற்றும் தடை குறித்து, கொலோமோயிஸ்கி உடனடியாக பதிலளிக்கவில்லை என்பதுடன் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...