Day: March 6, 2021
துயர் பகிர்வோம் – இளைப்பாறிய அதிபர் அமரர். திரு. சி.காராளபிள்ளை (06/03/2021)
தாயகத்தில் அனலை தீவை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய அதிபர் “கல்விச்சேவையாளர்” திரு.சி.காராளபிள்ளை அவர்கள் இறை பதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்,பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் காராளபிள்ளை அவர்கள் 03-03-2021 புதன்கிழமைமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. சரஸ்வதி ஏகாம்பரம் (06/03/2021)
யாழ் குப்பிளானை பிறப்பிடமாகவும், இந்தியா மதுரையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சரஸ்வதி ஏகாம்பரம் அவர்கள் 04/03/2021 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார். அன்னார் தங்கரத்தினம் காலம்சென்ற பூதப் பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலம் சென்றவர்களான சுப்பையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புமேலும் படிக்க...
“கேலிச்சித்திர நாயகன்” (சிரித்திரன் சுந்தர்) நினைவுக்கவி
கலை இலக்கியவானை வட்டமிட்ட சித்திரக் கலைஞன் கேலிச்சித்திர நாயகன் மாமனிதர் சிவஞானசுந்தரம் சிரித்திரன் சுந்தரென அழைக்கப்பட்டார் சிறப்போடு பங்குனித் திங்கள் மூன்றினிலே உதித்து அதே பங்குனித் திங்கள் மூன்றிலே இவ்வுலகை விட்டு ஏகினாரே ! சிரித்திர நாயகன் பத்திரிகையாளனாய் பதிப்பாசிரியராய் படைப்பாளியாய்மேலும் படிக்க...
‘இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி உதயம்!
‘இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை கட்சியின் தலைவர் வி.முத்துசாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “இலங்கைமேலும் படிக்க...
உக்ரைனின் முன்னாள் முக்கிய அதிகாரி அமெரிக்காவின் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்!
உக்ரேனிய முன்னாள் பொது அதிகாரி இகோர் கொலொமோய்ஸ்கி (Igor Kolomoisky) அமெரிக்காவிற்குள் நுழையத் தகுதியற்றவர் என்ற தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், பதவியில் இருந்த காலத்தில் குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியே அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்கமேலும் படிக்க...
அகதிகள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய குழு ஒன்று கைது
ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த குழு ஒன்று Yvelines மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பா-து-கலே பகுதியில் இருந்து பிரித்தானியாவுக்கு சிறிய படகுகள் மூலம் அகதிகளை கடத்தி வந்தனர். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர் இவ்வார ஆரம்பித்தில் இந்த குழுவை கைதுமேலும் படிக்க...
மார்செய் – யூதப்பாடசாலை – யூத வெதுப்பகம் மீது தாக்குதல் முயற்சி
நேற்று காலை மார்செய் நகரத்திலுள்ள யூதப்பாடசாலை அருகில் கத்தியுடன் சென்ற நபர் ஒருவர் காவற்துறையினரால் மடக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார். 60 வயதுடைய இந்த நபர், ஏற்கனவே காவற்துறையினரின் குற்றப்பட்டியலில் உள்ள நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யூதப் பாடசாலையுடன், அதனருகில் உள்ளமேலும் படிக்க...
ரஷ்ய – சீன தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்க்க வேண்டும்- கிளெமென்ற் பியூன்
ரஷ்யா அல்லது சீனாவின் கொரோனா தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பயன்படுத்த வேண்டாம் என பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ற் பியூன் (Clement Beaune) கோரியுள்ளார். ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி மற்றும் சீனாவின் சினோபார்ம் ஆகிய தடுப்பு மருந்துகள் ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்களால்மேலும் படிக்க...
மியன்மாரின் யாங்கோனில் தொடர் போராட்டம்- இராணுவம் கையெறி குண்டுத் தாக்குதல்!
இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மியன்மாரின் யாங்கோனில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தைக் கலைப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை மற்றும் ஸ்டன்ட் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாகத்மேலும் படிக்க...
சோமாலியாவில் தற்கொலை கார் குண்டுத் தாக்குதல்: 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு- 30பேர் காயம்!
சோமாலியாவில் நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு 30பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மொகாடிஷுவில் துறைமுகத்திற்கு அருகிலுள்ள உணவகத்திற்கு வெளியே நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு அருகிலுள்ள லுல் யேமன் உணவகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகமேலும் படிக்க...
அஇஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு
அஇஅதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக அஇஅதிமுக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஇஅதிமுக, திமுக தங்களதுமேலும் படிக்க...
தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க அமித்ஷா நாளை தமிழகம் வருகை..!
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகைதரவுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10 மணியளவில் நாகர்கோவில் வரும் அமித் ஷா, சுசீந்திரத்தில் தாணுமாலைய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இருக்கிறார். அதனைத் தொடர்ந்துமேலும் படிக்க...
வாக்கெடுப்பில் தோற்றாலும் போர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை – சரத் வீரசேகர
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலும் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிட விடப்போவதில்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எவர்மேலும் படிக்க...
மிச்செல் பச்சிலெட்டை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட்டை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார். படையினருக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்மேலும் படிக்க...
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இராணுவம் உதவும்- யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பொருளாதார ரீதியாக அவர்களை முன்னேற்ற இராணுவம் உதவுமென யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு இராணுவத்தினரால் உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை),மேலும் படிக்க...
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இடம்பெற்று வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் மேலும் வலுவடைந்தது
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, யாழில் மேற்கொள்ளப்பட்டுவரும் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இன்று (சனிக்கிழமை) இணைந்துக் கொண்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்மேலும் படிக்க...