Main Menu

ஈரானில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தையே ஒரே தீர்வு: கட்டார் இளவரசர்

ஈரானில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையே ஒரே தீர்வு என கட்டார் இளவரசர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றத்தை போக்குவது குறித்து, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரெஹானி மற்றும் கட்டார் இளவரசர் ஆகியோர் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்போதே, அமெரிக்காவுடன் நிலவும் மோதல் போக்கை கைவிட பேச்சுவார்த்தையே தீர்வு என்று கட்டார் இளவரசர் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் என்னுடைய இந்த பயணம் அமைந்து இருக்கிறது. தற்போது ஈரானில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையே ஒரே தீர்வாக அமையும்’ என கூறினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஈரானின் அதிகார தலைவர் அயத்துல்லா அலி காமேனியையும் கட்டார் இளவரசர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரேனிய விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்தியதையடுத்து, ஆத்திரம் கொண்டுள்ள ஈரான் மக்கள் அரசிற்கெதிராக டெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

பகிரவும்...