Main Menu

இஸ்ரேல் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அவுஸ்திரேலியா பிரிட்டன் கூட்டாக வேண்டுகோள்

மனிதாபிமான உதவிகள் காசாவை சென்றடைவதை இஸ்ரேல்உறுதி செய்யவேண்டும் என அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

அவுஸ்திரேலிய இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்

நிரந்தர பேண்தகு யுத்தநிறுத்தத்தை உருவாக்குவதற்கு உடனடி யுத்தநிறுத்தம் அவசியம் எனவும் இரு நாடுகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இரண்டு நாடுகளும் இன்று கூட்டாக அறிக்கையொன்றை விடுத்துள்ளன.

காசாவில் காணப்படும் பேரழிவு மனிதாபிமான நிலவரம் குறித்து அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் கவலை வெளியிட்டுள்ளன.

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலை கண்டித்துள்ள அவுஸ்திரேலிய பிரிட்டன் இந்த தாக்குதல் அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளதுடன் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளன.

அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் வரையறைக்குள் செயற்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவுஸ்திரேலியாவும் பிரிட்டனும் உடனடி யுத்தநிறுத்தம் நிபந்தனையற்ற பயணக்கைதிகள் விடுதலை பொதுமக்களை அனைத்து சந்தர்ப்பத்திலும் பாதுகாத்தல் என்பவற்றிற்கான வேண்டுகோளையும் விடுத்துள்ளன.

பகிரவும்...