Main Menu

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாள்வதில் மக்கள் மத்தியில் அதிருப்தியை எதிர்கொண்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது மீண்டும் ஊழல் வழக்குகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான ஊழல் விசாரணை இரண்டு மாத இடைவெளிக்கு பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், குறித்த விசாரணைகளுக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஆஜராக வேண்டியதில்லை என்று நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது.

70 வயதான நெதன்யாகு மீது மோசடி, நம்பிக்கையை மீறுதல் மற்றும் இலஞ்சம் பெற்றுக்கொள்வது போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் நண்பர்களிடமிருந்து ஆடம்பரமான பரிசுகளைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

எனினும், நெத்தன்யாகு இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதுடன், இவை பக்கச் சார்புடைய சட்ட அமுலாக்க அமைப்பினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சூழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலில் இலஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் ஆகியவற்றுக்கு மூன்று ஆண்டுகள் வரையும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...