Main Menu

கொரோனாவால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புகைத்தலைக் கைவிட்டனர்

பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் வயதானோரை அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

புகைபிடிப்போருக்கு கொவிட்-19 நோய்க்கான அறிகுறிகள் அதிகம் காணப்படும். மேலும் இதயம், நுரையீரல் சார்ந்த நோய்களுடன், புற்றுநோயும் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரித்தானியாவில் கடந்த 4 மாதங்களாகச் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர். அவர்களுள் அதிகமானோர் இளையர்கள் எனச்சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும், 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் நோய்ப்பரவல் சூழலில் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட முயற்சி செய்ததாக Action on Smoking and Health (ASH) அமைப்பும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியும் (UCL) சேர்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

பகிரவும்...