Main Menu

இராணுவ தளபதி நரவானே நேபாளம் செல்கிறார்

இராணுவ தளபதி நரவானே மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று (புதன்கிழமை) நேபாளம் செல்லவுள்ளார்.

இந்தியா – நேபாளத்திற்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவ தளபதியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதன்போது நேபாள ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆகியோரை நரவானே சந்திப்பார் என்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் நரவானே நேபாள இராணுவ தலைமையகத்துக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை பிரதமர் சர்மா ஒலியை நரவானே சந்தித்து பேசவுள்ளார். இதன்போது நேபாளத்தின் புதிய வரைப்பட பிரச்சினைக்குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்  இந்தியா- நேபாள நாட்டு இராணுவங்களுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும், இரு நாட்டு எல்லையை திறன்பட நிர்வகிப்பது குறித்தும் தளபதி தாப்பாவுடன், நரவானே விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும்  கருதப்படுகிறது.

பகிரவும்...