Main Menu

இன்று மகளிர் தினம்: சென்னையில் ஔவையார் சிலைக்கு அரசு மலர் மரியாதை

இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.. அந்தவகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்: “சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும்” என்று தன்னுடைய சர்வதேச மகளிர் தின வாழ்த்து செய்தியில் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.. அதேபோல, திராவிட மாடல் அரசின் பெண்களுக்கான உரிமை பயணம் தொடரும் என்றும் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதேபோல, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், “அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்.. பாரதி கண்ட புதுமைப் பெண்களின் வடிவமாக ஜெயலலிதா திகழ்ந்ததையும், அவர்களைப் போல பல்வேறு பொதுத்தளங்களில் இயங்கும் பெண்களையும் காணுகின்றபோது மனம் பேர் உவகை கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு: இன்று தமிழக அரசு சார்பிலும் பெண்கள் தினம் சிறப்பிக்கப்படுகிறது.. அந்தவகையில், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், தமிழ்ப் பெருமாட்டியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன.

மாந்தர் குலத்திற்குப் பெருமை சேர்த்த ஔவை பெருமாட்டியாரைப் போற்றும் வகையில் உலக மகளிர் நாளான இன்று வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால், சென்னை காமராசர் சாலையில் (மெரினா கடற்கரை) அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், தமிழ்ப்பெருமாட்டியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், மேயர், துணை மேயர், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

பகிரவும்...