Main Menu

இந்திய படையினரால் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளை இலங்கை படையினர் வென்றனர் – ஜனாதிபதி

30 வருட யுத்தத்தைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட தற்போதைய பயங்கரவாத நிலைமையை அழிப்பதற்கான முக்கியப் பொறுப்பு, நாட்டின் புலனாய்வு நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய படையினர் தின நிகழ்வு இன்றையதினம் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற்றிருந்தது.

இதில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையானது நீண்டகால யுத்தத்துக்கு பழகிய நாடாகும்.

30 வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தில் இராணுவம் வெற்றிக் கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா தமது படையினரை அனுப்பி இருந்த போதும், அவர்களால் வெற்றிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் எமது நாட்டு இராணுவம் விடுதலைப் புலிகளை தோற்கடித்தது.

கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை சமாதானமாக இருந்த போதும், கடந்த மாதம் 21ம் திகதி மிலேட்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரவாதமானது, உள்நாட்டு பயங்கரவாதம் அன்றி, சர்வதேச பயங்கரவாத நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இதனை முறியடிப்பதற்கு இலங்கையின் முப்படையினருக்கும், காவற்துறையினருக்கும், புலனாய்வுப் பிரிவுக்கும், சிவில் பாதுகாப்பு தரப்பினருக்கும் இயலுமை உண்டு.

நாட்டில் யுத்தத்தை வெற்றிக் கொள்வதற்காக தங்களது உயிர்நீத்த படையினருக்கு தமது கௌரவத்தை செலுத்துவதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

பகிரவும்...