Main Menu

இந்தியாவில் மருத்துவத் துறையினருக்கான உபகரணங்களின் தயாரிப்பு தீவிரம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மருத்துவத் துறையினருக்கான உடல்காப்புக் கவசங்களைத் தயாரிக்கும் பணியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

குறித்த அமைப்பின் பல்வேறு ஆய்வகங்களைச் சேர்ந்த பல்துறை வல்லுநர்கள் ஒன்றிணைந்து, கொரோனா நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான உடல்காப்புக் கவசத்தை உருவாக்கியுள்ளனர்.

ஒரு நாளைக்கு ஏழாயிரம் உடல் கவசங்கள் தயாரிக்கும் திறன் உள்ளதாகவும், 15 ஆயிரம் உடல் கவசங்கள் தயாரிக்கும் வகையில் திறனை மேம்படுத்த உள்ளதாகவும் மேம்பாட்டு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு நாளைக்குப் பத்தாயிரம் முகக் கவசங்கள் தயாரித்து வருவதாகவும், 20 ஆயிரம் கவசங்கள் தயாரிக்கும் வகையில் விரைவில் உற்பத்தித் திறன் மேம்படுத்தப்படும் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...