Main Menu

அமேசான் காடுகளிலும் தலைகாட்டத் தொடங்கிய கொரோனா- பழங்குடியின இளம் பெண்ணுக்கு வந்தது!

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் வனத்தில் வசிக்கும் பழங்குடியின யுவதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் பெரும் பகுதி பிரேசிலில் தான் உள்ளது. இந்த காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச சமூகத்தை பேரச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கொரோனா தொற்றுநோய், தற்போது அமேசான் காடுகளிலும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.

இந்தவகையில், கொலம்பியா நாட்டோடு எல்லையை பகிர்ந்துகொள்ளும், பிரேசிலின் சாண்டோ அன்டனியோ மாவட்டத்திற்குட்பட்ட வனத்தில் வாழும் கோகமா (Kokama) பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய இளம் பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளராக பணியாற்றும் அப்பெண், அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பகிரவும்...