திசு காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்: லக்னோ-பெங்களூரு விமானத்தில் பரபரப்பு
லக்னோ-பெங்களூரு இண்டிகோ விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
லக்னோவில் இருந்து பெங்களூரு நகரத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது.
விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது, கைகளை துடைத்துக் கொள்ள பயன்படுத்தும் திசு காகிதம் கண்டெடுக்கப்பட்டது.
அதில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, விமானம் பெங்களூருவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலை அறிந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை முழுமையாக சோதனையிட்டனர். முடிவில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை.
இருப்பினும், மிரட்டல் விடுக்கப்பட்ட திசு காகிதத்தை கைப்பற்றிய அதிகாரிகள், அதை எழுதிய நபர் யார் என்ற விசாரணையை தொடர்ந்துள்ளனர்
