Main Menu

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 98 இலட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98 இலட்சத்தை  கடந்துள்ள நிலையில், 93.24 இலட்சம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98 இலட்சத்தை கடந்துள்ளது. இதற்கமைய மொத்த பாதிப்பு 98,26,775 ஆக  உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 30,005 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 442 பேர் உயிரிழந்துள்ளனர். இதனூடாக கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,628 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,24,328 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் நேற்று மாத்திரம் 33, 494 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,59,819 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு 1.45 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 94.89 சதவீதமாக உயர்ந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...