Main Menu

இந்தியாவில் இதய நோயினால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் அதிருப்தி!

இந்தியாவில் இதய நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இதயநோய்களைக் கட்டுப்படுத்த உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அவ் அறிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில், “இதய நோய்களைக் கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தொழில்ரீதியாக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்களால் இதய நோய்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களை அவற்றின் உணவுப் பண்டங்களில் இருந்து அகற்ற போதுமான நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும்.

பங்களாதேஷ், பூட்டான், ஈக்வடோர், எகிப்து, இந்தியா, ஈரான், மெக்ஸிகோ, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளில் அதிகரித்து வரும் இதய நோய்களுக்குக் காரணமான கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்”  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...