Main Menu

இணையத்தில் வெளியான ஜனாதிபதி மக்ரோனின் சுகாதார பாஸ் விபரங்கள்

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் சுகாதார பாஸ் விபரங்கள் இணையத்தில் பரவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சுகாதார பாஸ் (pass sanitaire) தொடர்பான விபரங்கள் மிக பாதுகாப்பானது, இரகசியமானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இம்மானுவல் மக்ரோனின் சுகாதார பாசில் உள்ள QR குறியீடுடன் கூடிய அனைத்து விபரங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக ‘விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக’ ஜனாதிபதியின் எலிசே மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பாகியுள்ளது.  

பகிரவும்...