Main Menu

ஆஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்

ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் 17 மில்லியன் பேர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் ஸ்க்காட் மோரிசன் மீண்டும் போட்டியிடுகிறார்.

எதிர்தரப்புத் தலைவர் பில் ஷார்டன் (Bill Shorten) அவரை எதிர்த்து நிற்கிறார். இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது.

தேர்தலில், திரு மோரிசன், தோல்வியைத் தழுவினால், வரலாற்றில் மிகவும் குறுகியக் காலத்தில் பதவிவகித்த பிரதமர்  என்ற பெயரை அவர் பெறுவார்.

தேர்தலில்,  திரு. பில் ஷார்டன் வென்றால், 100 ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்தரப்புக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாகப் பிரதமர் ஆவார்.

பகிரவும்...