Main Menu

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 23 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் சந்தைப்பகுதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் பொதுமக்கள் 23 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் ஹெல்மெண்ட் மாகாணம் சங்கின் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரொன்று திடீரென வெடித்துச்சிதறியது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலைத்தொடர்ந்து ராக்கெட் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சந்தைப்பகுதியில் இருந்த பொதுமக்கள் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

சந்தைப்பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள்தான் நிகழ்த்தியுள்ளதாக் ஆப்கானிஸ்தான் பொலிஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்த உள்நாட்டுப்போரில் பயங்கரவாதிகள் அவ்வப்போது பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...