Main Menu

ஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி

லிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்சியின் தலைவர் ஜோ ஸுவின்சன் உறுதியளித்துள்ளார்.

லிபரல் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் பிரெக்ஸிற் ரத்து செய்யப்படுவதை உறுதிப்படுத்துமென அக்கட்சியின் தலைவராக முதன்முறையாக கட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஸுவின்சன் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் நாம் வாழும் வீட்டை எரிப்பதற்கு சமமானது எனவும் பிரெக்ஸிற்றை ரத்து செய்வதற்கான தமது கட்சியின் முயற்சியில் நாட்டு மக்கள் இணைய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்து வரும் பொதுத்தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்கவுள்ள ஜோ ஸுவின்சன், பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஜெரமி கோர்பின் மற்றும் நைஜல் பராஜ் ஆகியோரை எதிர்த்து போட்டியிட மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொன்சர்வேற்றிவ் கட்சியுடனோ அல்லது தொழிற்கட்சியுடனோ கூட்டணி அமைப்பதை நிராகரித்ததுடன் ஜோன்சன் மற்றும் கோர்ப்பின் இருவருமே பிரதமராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்களெனவும் ஸுவின்சன்தெரிவித்துள்ளார்.

பகிரவும்...