Main Menu

அல்ஜீரியாவில் பதின்மூன்றாவது வாரமாக தொடரும் போராட்டம்!

தென் அமெரிக்க நாடான அல்ஜீரியாவில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பதின்மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது.

இதனால், அல்ஜீயர்ஸ் நகரில் உள்ள சின்னமாக திகழும் கிராண்ட் தபால் அலுவலகத்தை சுற்றி பொலிஸார், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது, இராணுவத் தலைவரான லெப்டினென்ட் ஜெனரல் அஹமட் கைட் சலாவுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்புகின்றனர்.

அல்ஜீரிய தலைநகரில் அணி திரண்டுள்ள போராட்டக்காரர்கள், முன்னாள் ஜனாதிபதி அப்தலசீப் பூட்டெலிகாவுடன் தொடர்புடைய அதிகாரிகள் அகற்றப்பட வேண்டும் என்றும் ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அத்தோடு, புதிய சுயாதீன நிறுவனங்கள் செயற்பாட்டை மேற்பார்வையிடும் வரையில் இந்த வாக்கெடுப்பு செல்லுபடியாகாது என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

பகிரவும்...