Main Menu

அயோத்தி வழக்கு : தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் – மதுரை ஆதீனம் வலியுறுத்து!

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அயோத்தி வழக்கு குறித்து இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மதுரை ஆதினம், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் தமிழக மக்கள் மாத்திரம் அல்ல, இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களும் அமைதியை கட்டிக்காப்பாற்ற வேண்டும்.

அனைவரும் ஒரே இறைவனின் குழந்தைகள். சாதி, மதத்தால் நாம் பிரிந்து விடக்கூடாது. இந்து, இஸ்லாமிய சகோதரர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கையை இறைவனின் பாரபட்சமற்ற தீர்ப்பைத்தான் 1330 திருக்குறளும் எடுத்துரைக்கின்றன. உலகில் வாழும் அனைவருக்கும் திருக்குறள் வேத நூலாக திகழ்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியும், அமைச்சர்களும் திருக்குறள், திருவள்ளுவர் சிறப்பு குறித்தும், புறநானூறு குறித்தும் பல்வேறு இடங்களில் எடுத்துரைத்து சிறப்பு செய்து வருகின்றனர்.

தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளது.

பகிரவும்...