Main Menu

அமைதியான கூட்டத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு: மியன்மார் இராணுவத்துக்கு ஐ.நா. கண்டனம்!

அமைதியான கூட்டத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

மியன்மார் இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அன்டோனியோ குட்டரெஸ், தேர்தல் முடிவுகளை மதித்து மக்களாட்சிக்கு திரும்புமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘அமைதியாக போராட்டம் நடத்துவோருக்கு எதிராக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் படைகளை பயன்படுத்துவது, மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாதது’ என கூறினார்.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் இராணுவம் விதித்துள்ள தடையை மீறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.

பகிரவும்...