Main Menu

கொரோனாவை வென்று வீடுதிரும்பிய 101 வயது மூதாட்டி!

ஸ்பெயினில் கொரோனா வைரஸிலிருந்து 101 வயது மூதாட்டி ஒருவர் முற்றுமுழுதாக குணமடைந்துள்ளார்.

ஸ்பெயினின் ஹூஸ்கா (HUESCA) பகுதியிலுள்ள மருத்துவமனையில் மூதாட்டியான என்கார்னாசியன் பூசான் (Encarnacion Buisan) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவ சிகிச்சைக்கு இடையே தனது 101ஆவது பிறந்த நாளை கடந்த மாதம் 15ஆம் திகதி கொண்டாடினார்.

இருப்பினும் மருத்துவமனையில் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவருக்கு கொரோன தொற்று நீங்கி உடல்நிலை தேறியதையடுத்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு மூதாட்டி என்கார்னாசியான் பூசான் அழைத்து செல்லப்பட்டார்.

பகிரவும்...