Main Menu

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: செரீனா- மெட்வேடவ் வெற்றி, என்டி முர்ரே தோல்வி!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றுப் போட்டியில், டேனில் மெட்வேடவ், செரீனான வில்லியம்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், அவுஸ்ரேலியாவின் கிறிஸ்டோபர் ஓ கோனெல்லை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் டேனில் மெட்வேடவ் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.


இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் என்டி முர்ரேவும், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமும் பலப்பரீட்சை நடத்தினர்.

இப்போட்டியில், 6-2, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.


பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மார்கரிட்டா காஸ்பரியனுடன் மோதினார்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்த இப்போட்டியில், செரீனா, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.


மற்றொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், பெலராஸின் ஓல்கா கோவர்ட்சோவாவை எதிர்த்து விளையாடினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், எளிதாக வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

பகிரவும்...