Main Menu

‘அமெரிக்கா ஒரு முரட்டு நாடு’- ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக சிரியா பதில்!

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை படுகொலை செய்ய விரும்பியதை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக கூறியதையடுத்து, அமெரிக்காவை ஒரு முரட்டு நாடு என சிரியா சாடியுள்ளது.

சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி, அரசு செய்தி நிறுவனமான சானா இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், ‘ட்ரம்ப் அத்தகைய ஒரு நடவடிக்கையை ஒப்புக் கொண்டது அமெரிக்க நிர்வாகம் ஒரு முரட்டு அரசு என்பதை உறுதிப்படுத்துகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாஸ்க் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், இந்த இதனை வெளிப்படையாக கூறிய ஓருநாளுக்கு பிறகு இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இநத் செவ்வியின் போது, ‘நான் 2017ஆம் ஆண்டு சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தை கொல்ல நினைத்தேன். ஆனால் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜிம் மேட்டிஸ் அந்த முடிவை மறுத்துவிட்டார். அதனால் அவர் முடிவுக்கே விட்டுவிட்டேன்’ என கூறினார்.

சிரிய ஜனாதிபதி பொதுமக்கள் மீது இரசாயன தாக்குதலை நடத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து, அல்-அசாத்தை படுகொலை செய்வதாக ட்ரம்ப் கூறியதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 2017ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷெய்கவுன் மீது நடத்தப்பட்ட சாரின் இரசாயன தாக்குதலில், 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

ஆட்சியின் ஷைரத் விமான நிலையத்திற்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்களை .ரம்ப் கட்டவிழ்த்துவிட்டார். அதில் இருந்து இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் செவ்வாய்க்கிழமை ட்ரம்பின் கருத்துக்கள், செப்டம்பர் 5ஆம் திகதி 2018ஆம் ஆண்டு ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய மற்ற கருத்துக்களுக்கு முரணானது. அப்போது ட்ரம்ப் அல்-அசாத்தை கொல்வது ஒருபோதும் சிந்திக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 2018ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா, டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள அப்போதைய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நகரமான டூமா மீது மற்றொரு ஆட்சி இரசாயன தாக்குதலுக்குப் பின்னர் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.

ஒன்பது ஆண்டுகால யுத்தத்தின் பின்னர், அசாத் அரசாங்கம் சிரியாவின் 70 சதவீதத்தை கட்டுப்படுத்துகிறது.

இந்த மோதலானது 2011ஆம் ஆண்டு முதல் நூறாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது மற்றும் சிரியாவின் போருக்கு முந்தைய மக்கள்தொகையில் சுமார் பாதி மக்களை இடம்பெயர வழிவகுத்தது.

பகிரவும்...