வேலைக்காக, நிறுவனங்களில் பயிற்சி பெற முன் வருவோருக்கு ஊக்கத் தொகை
நீண்ட காலமாக வேலை தேடுபவராகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தேடும் வேலைக்காக, நிறுவனங்களில் பயிற்சி பெற முன்வருபவர்களிற்கு, உதவித் தொகை வழங்க உள்ளதாக, பிரான்சின் தொழிற்துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் (Élisabeth Borne) அறிவித்துள்ளார்.
நீண்ட காலமாக வேலையின்றி (chômage), வேலை தேடும் தேசிய நிறுவனமான Pôle Emploi வில் பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் தாங்கள் தேடும் வேலைக்கான பயிற்சியில் (Fomation), நிறுவனங்களில் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக, அவர்களிற்கு 1000€ ஊக்குவிப்புத் தொகை (prime) வழங்க உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
பயிற்சி ஆரம்பத்தில் பாதித் தொகையும், பயிற்சி முடிவில் மீதித் தொகையும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்.