வாழ்க்கைச் செலவு: பிரான்ஸ் 10ம் இடம்
பிரான்சில் வாழ்க்கைச் செலவு ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்கிறது எனவும், முந்தைய ஆண்டுகளை விடவும், மாதம் ஒன்றுக்கு செலவிடும் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரெஞ்சு நபர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக €2,028 யூரோக்கள் செலவிட்டுள்ளதாக INSEE கருத்துக்கணிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 24% சதவீதத்தால் அதிகமாகும். 1975 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 66% சதவீதத்தால் அதிகமாகும். வருடம் ஒன்றுக்கு 1.1% சதவீதத்தால் செலவிடும் பணம் அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஐரோப்பாவில் செலவீனங்கள் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் பத்தாவது இடத்தில் உள்ளது.
****
செலவீனங்கள் அதிகம் கொண்ட நாடுகள். (வருடாந்தத்துக்கான தொகை)
Luxembourg (45 310 euros),
Danemark (33 260 euros),
l’Irlande (30 063 euros),
les Pays-Bas (29 537 euros),
l’Autriche (27 844 euros),
Belgique (27 314 euros),
Suède (26 738 euros),
Finlande (26 541 euros)
l’Allemagne (24 925 euros).
France பத்தாவது இடத்திலும்,
l’Italie (18 592 euros)
மற்றும்
l’Espagne (16 814 euros)
ஆகிய நாடுகளும் உள்ளன.