ரிஆர்ரி வானொலியின் ஏற்பாட்டில் ரிஆர்ரி வானொலி நேயர்களின் பங்களிப்பில் வழங்கப்பட்ட புத்தகப்பைகளும் கற்றல் உபகரணங்களும் பரிசில்களாக வழங்கப்பட்டன
வவுனியா சேமமடு படிவம் ஒன்று முன்பள்ளிகளிகளின் மாணவர்கள் பங்கேற்ற 2014ஆம் ஆண்டுக்கான திறனாய்வுப் போட்டி நிகழ்வு 25-02-2013 இன்று விபுலானந்தர் முன்பள்ளியில் நடைபெற்றுள்ளது.
விபுலானந்தர், பாரதி, வள்ளுவர் ஆகிய முன்பள்ளிகளின் மாணவச் சிறார்கள் பங்குகொண்ட குறித்த திறனாய்வுப் போட்டி நிகழ்விற்கு முன்பள்ளி அபிவிருத்திச் சங்கத் தலைவர் இ.ராசமோகன் தலைமை தாங்கினார்.
பிரதமவிருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முன்பள்ளிகளின் மேற்பார்வையாளர் இராஜேஸ்வரன், கிராம அலுவலர் க.மார்க்கண்டு, சேமமடு சண்முகானந்தா வித்தியாலய அதிபர் சசிக்குமார், சேமமடு உபதபாலக அதிபர் எஸ்.பாக்கியம் உட்பட்டோர் பங்குகொண்டு சிறப்பினர்.
நிழ்வில் பங்குகொண்டு மூன்று முன்பள்ளிகளையும் சேர்ந்த 30 சிறார்களுக்கு, ரிஆர்ரி வானொலியின் ஏற்பாட்டில் ரிஆர்ரி வானொலி நேயர்களின் பங்களிப்பில் வழங்கப்பட்ட புத்தகப்பைகளும் கற்றல் உபகரணங்களும் பரிசில்களாக வழங்கப்பட்டன.
நிகழ்வில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அன்பளிப்புக்களை வழங்கிய ரிஆர்ரி வானொலி நேயர்களுக்கும் ஏற்பாடு செய்து உதவிய ரிஆர்ரி வானொலி நிர்வாகத்திற்கும் நிகழ்விற்கு வந்திருந்த பெற்றோர் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.