முன்னாள் போராளி குடும்பத்துக்கான உதவி வழங்கல்
அண்மையில் இனியவன் என்றழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் என்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சாவகச்சேரியில் தூக்கிட்டு இறந்ததை நேயர்கள் அறிந்திருப்பீர்கள்.
முன்னாள் விடுதலைப் புலிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியின் தென்மராட்சி பிரதேச பொறுப்பாளராக இருந்த இனியவன், அந்தக் கட்சியின் சாவகச்சேரி அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருந்தார்.
எனவே அவரது குடும்பம் நிர்க்கதியாக நிற்கும் நிலையில் எமது வானொலியின் சமூகப் பணியூடாக அன்பு நேயர்களின் அனுசரணையில் 1,51,580 ரூபா இலங்கை நாணயப்படி வழங்கி வைக்கப்பட்டது .
இவ் உதவி த.தே. கூட்டமைப்பின் முன்னாள் பா.உ.திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவிக்காக அன்புக்கு கரம் கொடுத்தவர்களின் பெயர் விபரங்கள்:
சங்கீதா அச்சகம் – பிரான்ஸ்
அன்ரி அம்மா பிள்ளைகள் – பிரான்ஸ்
சஞ்சய்
தேவமனோகரன் (TPR Transport) – பிரான்ஸ்
K.S.வேலாயுதம் – ஐக்கிய இராச்சியம்)
திருமதி.பத்மராணி இராஜரட்ணம் – ஜேர்மனி