மதிய போசனத்திற்கான நிதி உதவி
கனராஜன்குளம் ஆலங்குளம் தேவாலயத்தில் நடைபெற்ற ஒளிவிழாவை முன்னிட்டு TRTதமிழ் ஒலி வானொலியில் நீண்டகாலமாக சமூகப்பணிக்கு நிதி உதவி செய்துவரும். சுவிஸ் நாட்டை சேர்ந்த திருமதி விமலாச்சந்திரன் குடும்பத்தினர். மாணவர்களுக்கும் பொதுமக்களுக்குமான மதியபோசனத்திற்கான நிதி உதவி வழங்கியிருந்தனர். இந் நிகழ்வானது போதகர் ரவி அவர்களின் தலமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தியாகராசா, வவுனியவடக்கு பிரதேசசபை உறுப்பினர் ஜெயரூபன் பாடசாலை அதிபர் கணேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் திருமதி விமலாச்சந்திரன் அவர்கள் வறுமைக்கோட்டுக்குட்பட்ட பல்கலைகழக மாணவர்களின் கல்விநடவடிக்கைக்காக நீண்டகாலமாக மாதாந்தம் நிதிஉதவி செய்துவருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் இவ் நிகழ்வில் கலந்துக்கொண்ட பொதுமக்கள் TRT வானொலிக்கும் திருமதி விமலாச்சந்திரன் அவர்களுக்கும் நன்றியைத்தெரிவித்தனர்.
பகிரவும்...