Main Menu

மகாரம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி!

வவுனியா மாவட்டம் மகாரம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளியின் 2014ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று முன்பள்ளி ஆசிரியை திருமதி சசிகலா தலைமையில் நடைபெற்றுள்ளது.

பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் பூந்தோட்ட முன்பள்ளிகளின் கட்டமைப்புத் தலைவர் ஆர்.இராமச்சந்திரன், முதியோர் சங்கத் தலைவர் மு.நாராயணன், சித்திவிநாயகர் ஆலயத் தலைவர் சுதாகரன், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.செல்வகுமார் உட்பட்டவர்களும் பங்கு கொண்டு சிறார்களை உற்சாகப்படுத்தியதுடன் பரிசில்களும் வழங்கி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் கருத்துரைத்த முன்பள்ளிகளின் கட்டமைப்புத் தலைவர் ஆர்.இராமச்சந்திரன்,

முன்பள்ளிகளின் ஆசிரிகைகளின் அர்ப்பணிப்புக்கள் தொடர்பிலும் அவர்களுக்கு வேதனமாக மூவாயிரம் ரூபாவே கிடைப்பதாகவும் சில ஆசிரியைகளுக்கு அவ்வாறான வேதனங்கள் கிடைப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டிதுடன் முன்பள்ளி ஆசிரியைகளின் வேதனம் வழங்குதல் தொடர்பிலான நடவடிக்கையினை முன்னெடுக்கும் நடவடிக்கையினை வடக்கு மாகாணசபை கையிலெடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ரி.ஆர்.ரி வானொலியின் நிதிப் பங்களிப்பில் சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

143103039