பெயர் மாறுதலுக்கு உள்ளாகும் SNCF இணையத்தளம்
SNCF தொடருந்து நிறுவனத்துக்கு சொந்தமான இணையத்தளங்களில் ஒன்று பெயர் மாற்றத்துக்கு உள்ளாகின்றது.
அதன்படி Oui.sncf. com இணையத்தளம் வரும் ஜனவரி மாதம் முதல் sncf-connect. com என பெயர் மாற்றம் காண்கிறது. அத்தோடு வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக இருக்கும் என கருதி, இரண்டு வெவேறு இணையத்தளங்களை ஒன்றாக இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, oui.sncf மற்றும் l’Assistant SNCF ஆகிய இரு தளங்களையும் ஒன்றாக இணைத்து மேற்படி sncf-connect. com இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது என SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SNCF இன் இணையத்தளங்களுக்கு வருடத்துக்கு 450 மில்லியன் பேர் வருகை தருகின்றனர். l’Assistant செயலி 16 மில்லியன் தடவைகள் தரவிறக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும், ஒரு மில்லியன் தடவைகள் தொடருந்து வழியினை அறிந்துகொள்ள இடங்கள் தேடப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.