பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளிகளுக்கிடையிலான மழலைகளின் விளையாட்டுப்போட்டி
பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளி கட்டமைப்பு தலைவர் திரு.வேலாயுதம் அவர்களின்
தலைமையில் 17.06.2015 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு முன்பள்ளி
உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.தர்மபாலன், ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேச
மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவு ஊடாக 280 மாணவர்களுக்கு
கற்றல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அன்பளிப்பு பொருட்களும் வழங்கி
வைக்கப்பட்டன.