பரிஸ் : விவசாயிகள் மீண்டும் வீதி முடக்க ஆர்ப்பாட்டம்
இன்று மார்ச் 1 ஆம் திகதி விவசாயிகள் முன் அறிவித்தல் இல்லாத வீதி முடக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
‘Coordination rurale’ எனும் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் உழவு இயந்திரங்களைக் கொண்டு பல்வேறு பகுதிகளை முடக்கினர். குறிப்பாக Place de l’Etoile பகுதி முழுதாக முடங்கியுள்ளது. அங்கு 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
Arc de Triomphe பகுதியும் முடக்கப்பட்டது.
A4 நெடுஞ்சாலை முடக்கப்பட்டது. காலை 9.30 மணி அளவில் காவல்துறையினரின் தலையீட்டின் பின்னர் வீதி மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
பகிரவும்...