நாம்தமிழர் கட்சியினால் நினைவேந்தப் பட்டது தமிழினப் படுகொலை 10ம் ஆண்டு!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 18-05-2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள தலைமையகத்தில் சுடர் வணக்கம் மலர் வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.