திருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா (11/02/2019)
தாயகத்தில் சரவணை வேலணையை சேர்ந்த Paris இல் வசிக்கும் திரு திருமதி கந்தப்பிள்ளை பகீரதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சிவகரன் அவர்களும் தாயகத்தில் அரியாலை இருபாலையை சேர்ந்த Aulnay-sous-Bois இல் வசிக்கும் திரு திருமதி கனகராஜா ராதா தம்பதிகளின் செல்வப்புதல்வி மிதுலா அவர்களும் 3ம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.
கடந்த 3ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்துள்ள சிவகரன் மிதுலா தம்பதிகளை 11ம் திகதி திங்கட்கிழமை இன்று வாழ்த்துவோர் அன்பு அப்பா அம்மா, அன்பு மாமா மாமி, ரஞ்சன் சுமதி குடும்பம், மச்சாள் சயானா, அண்ணா பஞ்சகரன் பிரகலா குடும்பம், அண்ணா கிருபாகரன் கீர்த்திகா குடும்பம் மருமகள் லக்சனா, தங்கைகள் காயத்ரி, பராசக்தி, அண்ணா மிரோஜன் காயத்ரி குடும்பம், மருமகள் ஒலிவியா, தம்பி மிதுஷன், தங்கைமார் நிரோஜா மெலானி மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
திருமண பந்தத்தில் இணைந்துள்ள புதுமண தம்பதிகளை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் திரு திருமதி கனகராஜா ராதா தம்பதிகள் மற்றும் திரு திருமதி கந்தப்பிள்ளை பகீரதி தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.
வானம் வந்து பூ தூவ
வசந்தங்கள் வாழ்த்துரைக்க
பூமித்தாய் தாங்கி நிற்க
புது மண தம்பதிகள் வாழ்கவே!
கண்ணாளன் கரம் பற்றி
கடமை தன்னை நீ உணர்ந்து
கருணை ஒளி வீசி
காலமெல்லாம் வாழ்கவே!
இல்லறமே நல்லறமாய்
இனிமையான காலங்கள்
என்றென்றும் உம்மை தொடர
இருவருமே வாழ்கவே !
குடும்பமே கோயிலாக
குலவிளக்காய் நீ விளங்க
குறை இன்றி நிறை கண்டு
குலமகள் வாழ்கவே!
கடமையில் கண்ணாக
கனிவான மொழி பேசி
காலத்தை நீ மதித்து
கண்ணியமாய் நீ வாழ்கவே!
செல்வங்கள் பதினாறும்
சேர்ந்து விடும் உம்மோடு
சீரோடும் சிறப்போடும்
சிறந்தென்றும் வாழ்கவே!