Monday, February 11th, 2019

 

நான்குக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஹங்கேரிய தாய்மாருக்கு வருமான வரி விலக்கு

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஹங்கேரிய பெண்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார். நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி பேசியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். குடியேற்றத்தை மட்டும் சார்ந்திராமல் ஹங்கேரியின் எதிர்காலத்தை பாதுகாக்க இது ஒரு வழி எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஹங்கேரியின் மக்கள்தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்து வருகின்றதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் சாராசரியைவிட ஹங்கேரியில் குறைவாகும். இந்தநிலையில் நாட்டில் சரிந்துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும் எனவும் அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தபின்னர் இது ரத்து செய்யப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஹங்கேரிய மக்கள் வித்தியாசமாகமேலும் படிக்க…


யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் வாகனம் எரிந்து நாசமாகியது. 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை நடத்தியது. சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். “6 பேரில் இருவர் வீட்டுக்கு வெளியே நின்றனர். 4 பேர் வீட்டு வளவுக்குள் புகுந்தனர். வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு பெற்றோல் குண்டை எறிந்தனர். வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றனர்” என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த வீட்டுக்கு முன்னரும் தாக்குதல் நடத்தப்படமை குறிப்பிடத்தக்கது.


ரஜினியின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் பங்கேற்பு

நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவின் திருமணம் இன்று (திங்கட்கிழமை) சென்னையிலுள்ள லீலா பலஸில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர். அந்தவகையில், இந்த திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர், இன்று செளந்தர்யா-விசாகன் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவருடன் தமிழக அமைச்சர்களும் குறித்த திருமணத்தில் கலந்துகொண்டனர். முதல்வர் மற்றும் முக்கிய பிரபலங்களின் வருகையை முன்னிட்டு லீலா பலஸ் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இளவரசியின் வேட்பு மனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையகம்!

தாய்லாந்துப் பொதுத் தேர்தலில், பிரதமர் பதவிக்குப் போட்டியிட தீர்மானித்திருந்த இளவரசி உபோல்ரத்னாயின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் இன்று(திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தாய்லாந்து இளவரசி உபோல்ரத்னாவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. இதன்காரணமாக அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரசியலில் ஈடுபடக்கூடாது எனவும் அரசியல் பதவிகளை வகிக்கக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி தாய்லாந்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவப்புரட்சிக்கு பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப்பகுதிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிரியங்கா காந்திக்கு இன்று (திங்கட்கிழமை) லக்னோ நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சோனியா காந்தி, ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்காவும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23 ஆம் திகதி ராகுல் அறிவித்தார். பிரியங்கா உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏனைய 38 தொகுதிகளின் பொறுப்பாளராக இளம் தலைவர்களில் ஒருவரும் ராகுலுக்கு நெருக்கமானவரான ஜோதிராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் இன்று உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றனர். இதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா, ஜோதி ராதித்யா சிந்தியா மூவரும் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல்மேலும் படிக்க…


முதல்வர் சந்திரபாபுவின் போராட்டத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை !

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தர்ம போராட்ட தீக்ஷா’ என்ற பெயரில் டெல்லியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று (திங்கட்கிழமை) ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார். குறித்த போராட்டத்தில் பங்குப்பற்றிய மாற்றுத்திறனாளியான தவல அர்ஜுன் ராவ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், தெலுங்கில் எழுதப்பட்ட தற்கொலை கடிதம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இரண்டு பக்கங்களை உள்ளடக்கிய குறித்த கடிதத்தில் தான் இவ்வாறான முடிவை எடுப்பதற்கு நிதி நெருக்கடியே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று(திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நிதியமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இதுவரை 147 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 152 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை 123 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 129 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், இதுவரை 118 ரூபாயாகவிருந்த சுப்பர்மேலும் படிக்க…


வட.மாகாண ஆளுநருடன் நோர்வே தூதுவர் விசேட சந்திப்பு!

வட.மாகாண ஆளுநரை இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டட்சேத் (Thorbjørn Gaustadsæther) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் பிரயோக விஞ்ஞானத்துக்கான நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுத்தமான வலு மற்றும் சுகாதாரம் என்ற தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பணம் சென்றிருந்த நோர்வே தூதுவர் வடக்கு மகாண ஆளுநர் சுரேன் ராகவன், யாழ்ப்பாண பாதுகாப்பு படை அணிகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மற்றும் வட மாகாணத்துக்கான பிரதம செயலாளர் ஏ. பதிநாதன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அத்துடன், யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் அவர்களையும் நோர்வே தூதுவர் சந்தித்திருந்தார். வட.மாகாணத்தில் காணப்படும் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பாகத் தெளிவான புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்வதற்குமேலும் படிக்க…


யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் நிறைவு!

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறித்த பகுதியில் தூபியை அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆரம்பக் கட்ட வேலையுடன் குறித்த நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.  இந்த நிலையில் குறித்த தூபியை முழுமையாக பல்கலைக்கழக மாணவர்கள் நிறுவியுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் உறவுகள் என பலருடைய நினைவாக இந்த தூபி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த தூபியின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவுசெய்யப்பட்டு, இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கஷோக்கியின் படுகொலையை நாங்களே விசாரணை செய்வோம்: சவுதி அரேபியா

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டிய அவசியமில்லை எனவும் சவுதியின் திறமையான சட்ட அமைப்புமுறையால் இந்த விசாரணையை கையாள முடியுமெனவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல்-ஜுபெய்ர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கஷோக்கி கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்ட அடெல் அல்-ஜுபெய்ர், அந்த படுகொலைக்கு சவுதி அரசுக்கும் தொடர்புள்ளது என்பதை மறுப்பு தெரிவித்தார். சவுதி இளவரசர் மொஹம்மட் பின் சல்மானின் ஒப்புதல் இல்லாமல் சவுதி அதிகாரிகள் இப்படுகொலையை முன்னெடுத்திருக்க வாய்ப்பில்லையென அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருந்தது. சவுதி இளவரசரே கஷோக்கியின் படுகொலைக்கு உத்தரவிட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க செனட்டர்களும் தெரிவித்திருந்தனர். ஆனால் தமது இளவரசருக்கும் இக்கொலைக்கும் எவ்விதமான தொடர்புமில்லை எனவும் அதற்கான உத்தரவை அவர் வழங்கவில்லை எனவும் அமெரிக்கமேலும் படிக்க…


மஹிந்தவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது: பிரதமர் ரணில்

புதிய அரசிலமைப்பு நாட்டினைத் துண்டாக்கும் எனக்கூறிய மஹிந்த ராஜபக்ஷவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆட்சியைப் பிடிப்பதற்காக மீண்டும் தமிழர்களை ஏமாற்றும் விதத்தில் கருத்துக்களை மஹிந்த வெளியிட்டு வருகின்றார். ஆனாலும் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றனர். தமது ஆட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பல தடவைகள் பேச்சு மேசைக்கு அழைத்த மஹிந்த ராஜபக்ஷ, இறுதியில் அவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் ஏமாற்றியிருந்தார். இவ்வாறு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த செய்த மஹிந்த, எந்த முகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப்போகின்றார்? புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு விரைவில் கூடும்.மேலும் படிக்க…


உலக அரசாங்க உச்சிமாநாடு டுபாயில் ஆரம்பம்

உலக அரசாங்க உச்சிமாநாடு ஐக்கிய அரபு இராச்சியத்தின் இரண்டாவது பெரிய நகரான டுபாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த உச்சிமாநாடு ஆரம்பமாகியுள்ளது. இந்த உச்சிமாநாட்டில் 140 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டுள்ளனர். காலநிலை மாற்றம், சர்வதேச அரசாட்சியின் புதுமையான முன்னேற்றம், விஞ்ஞானம் – தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்கத்தை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமைச்சரவை விவகார அமைச்சர் மொஹமட் அப்துல்லா மற்றும் உலக பொருளாதார மன்றத்தின் நிறுவுனரும், நிர்வாகத் தலைவருமான க்ளோஸ் ஷ்வாப் ஆகியோரின் உரைகளுடன் மாநாடு ஆரம்பமானது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் 600 பேர் உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


61 வது கிராமி விருது விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்

சர்வதேச இசை சாம்ராஜ்ஜியத்தின் ஜாம்பவான்களுக்கு மகுடம் சூடும், 61-ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இசை உலகில் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு வழங்கப்பட்டன. லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் 49 பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கு கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவை 15 முறை கிராமி விருதை பெற்றவரான அலிசியா கீஸ் தொகுத்து வழங்கினார். இதில், ஆண்டின் சிறந்த பாடலாக childish gambino-வின் This Is America என்ற மியூசிக் அல்பம் தேர்வு செய்யப்பட்டது. பிரபல பொப் இசைப் பாடகி லேடி ககா, மூன்று பிரிவுகளில் விருது வென்று அசத்தியுள்ளார். தனி நபர் பிரிவு மற்றும் குழுப்பிரிவில் சிறந்த பொப் பாடலுக்கான விருதுகளை வென்ற லேடி ககா,மேலும் படிக்க…


காதலர் தினத்துக்காக 45 லட்சம் ரோஜாப்பூக்கள் ஏற்றுமதி!

காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 இலட்சம் ரோஜாப்பூக்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர், மலேசியா, டுபாய், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் விற்பனையாகவுள்ள ரோஜாவொன்றின் விலை 16 ரூபாயிலிருந்து 17 ரூபாய் வரை ஏற்றுமதியாகியுள்ளது. உள்ளூர் சந்தையில் 20 ரோஜாப்பூக்கள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதேவேளை கடந்த ஆண்டு ஒரு ரோஜாப்பூ 10 ரூபாயிலிருந்து 13 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ட்ரம்ப்-கிம் சந்திப்பு உலக சமாதானத்தில் தாக்கம் செலுத்தும்: வியட்நாம் மக்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னிற்கும் இடையிலான சந்திப்பு உலக சமாதானத்தில் பாரிய தாக்கம் செலுத்தும் என வியட்நாம் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். ட்ரம்ப்-கிம் சந்திப்பு தலைநகர் ஹனோயில் நடத்தப்படவுள்ளமையை வியட்நாம் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், அது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இச்சந்திப்பு குறித்து வியட்நாம் பிரஜையொருவர் கூறுகையில், ”ட்ரம்ப் மற்றும் கிம் தற்போது உலகின் முக்கிய இரு நபர்களாக மாறியுள்ளனர். அவர்கள் உலக சமாதானத்தில் நிச்சயம் தாக்கம் செலுத்தக்கூடும். அவர்கள் இருவரையும் கண்டு நான் வியக்கிறேன்” எனத் தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் வியட்நாமில் நடைபெறவுள்ள சந்திப்பு வெற்றிகரமாக அமையும். இப்பேச்சுவார்த்தை அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையிலான சமாதானத்திற்கு அத்திவாரமாக அமையும் என எதிர்பார்ப்பதாக மற்றுமொருவர் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதிக்கும், வடகொரிய தலைவருக்கும் இடையிலான வரலாற்குமேலும் படிக்க…


பிரியங்கா காந்தி வருகை மோடி அரசுக்கு பாதிப்பு- இளங்கோவன்

பிரியங்கா காந்தி வருகையால் மோடி அரசுக்கு பாதிப்பு ஏற்படுமென்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். குமாரபாளையத்தில் நடைபெற்ற விழாவின் போதே அவர் இதனைக்கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கிரஸ் ஆட்சியின்போது கிராமப்புற விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் பிரதமர் மோடி அரசியலில் சரியாக அமுல்படுத்தப்படவில்லை. எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவிலுள்ள அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்ற உத்தரவாதத்தை ராகுல்காந்தி கூறியுள்ளார். பிரியங்கா காந்தியின் வருகையால் மத்தியில் ஆளும் மோடி அரசு ஆடிப்போய்யுள்ளது. எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு உங்கள் வாக்கினை செலுத்த வேண்டும். மத்தியில் பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும். மாநிலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


கிளிநொச்சியில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைக்கப் படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

முறையற்ற விதத்தில் கட்டடம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு அனுமதி வழங்கிய கரைச்சி பிரதேச சபைக்கு எதிராகவும், ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கரடிப்போக்கு சந்தியில் கரைச்சி பிரதேசசபைக்கு சொந்தமான காணியில் முறையற்ற விதத்தில் கட்டடம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே, இந்த போராட்டம் நடத்தப்பட்டது. பன்னங்கண்டி பகுதியை சேர்ந்த சுமார் 18 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், குறித்த பகுதியில் கட்டடம் அமைக்க கரைச்சி பிரதேச சபையினர் முறையற்ற விதத்தில் அனுமதி வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், வசதி படைத்தவர்களிற்கு வர்த்தக நடவடிக்கைக்காக இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவை உள்ளவர்களிற்கு வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.


பாலச்சந்திரன், இசைப்பிரியாவை இராணுவம் சுட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை – மஹிந்த

விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும், இராணுவம் கைதுசெய்து சுட்டுக்கொன்றமைக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என, முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். போலிக் காணொளிகளையும், புகைப்படங்களையும் வைத்து படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவுக்குச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்திய ஊடகவியலாளர்கள் போர்க்குற்றம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சிறுவன் அல்ல என்றும், அவர் ஒரு போராளி என்றும், அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கியதாகவும், சுட்டிக்காட்டினார். அதேவேளை, இசைப்பிரியாவும் ஆயுதம் தூக்கிய ஒரு போராளியே அன்றி, அவருக்குப் புலிகள் அமைப்பினர் சூட்டிய பெயர்தான் இசைப்பிரியா என்றும்மேலும் படிக்க…


இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவிற்கு விஜயம்

2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தியாவிற்குச் சென்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாடு இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ‘அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான உலகின் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ‘தி ஹிந்து’ ஊடகத்தினால் நடத்தப்படும், இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பெங்களூறிற்கு மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மரண தண்டனைக்கு ஆயத்தம்! – தூக்கு கயிற்றின் தரம் தொடர்பாக ஆராய நடவடிக்கை!

தூக்கு மேடைக்கு பயன்படுத்தப்படும் கயிற்றின் தரத்தை ஆராய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. தூக்கு கயிறு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான தரத்தில் காணப்படுகின்றதா என்பது தொடர்பாக ஆராய்வதற்கு அதனை இலங்கை தரச்சான்றிதல் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த தூக்கு கயிற்றின் தரம் தொடர்பாக ஏதேனும் சிக்கல் காணப்படும் பட்சத்தில், தரமான புதிய தூக்கு கயிறை வெளிநாட்டிலிருந்து விரைவில் இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த கயிறானது, கடந்த 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


தமிழர்கள் கோவில்களை அமைத்து நிலத்தைப் பிடிப்பவர்கள் அல்லர்: மனோ கணேசன்

தமிழர்கள் பிறமதத்தவர்கள் போன்று இந்து மக்கள் வாழாத இடங்களில் கோவில்களை அமைத்து நாட்டையும் நிலத்தினையும் பிடிப்பதில்லை என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மற்றும் சமூகமேம்பாடு, இந்துக்கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் ஒரு அரசியல் விபத்து ஏற்பட்டது. எங்களது அரசாங்கத்தினை சில தரப்பினர் திருடமுற்பட்டனர். அந்த கும்பலை மக்களின் பலம் மற்றும் சட்டத்தின் பலத்துடன் நாங்கள் விரட்டி அடித்துள்ளோம். அதனால் எமது அமைச்சு மூலம் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் சிலதாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறான விடயங்கள் சில நன்மைகளைத் தந்துள்ளன. நாரதர் கலகம் நல்லதில் முடியும்மேலும் படிக்க…


திருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா (11/02/2019)

தாயகத்தில் சரவணை வேலணையை சேர்ந்த Paris இல் வசிக்கும் திரு திருமதி கந்தப்பிள்ளை பகீரதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சிவகரன் அவர்களும் தாயகத்தில் அரியாலை இருபாலையை சேர்ந்த Aulnay-sous-Bois இல் வசிக்கும் திரு திருமதி கனகராஜா ராதா தம்பதிகளின் செல்வப்புதல்வி மிதுலா அவர்களும் 3ம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள். கடந்த 3ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்துள்ள சிவகரன் மிதுலா தம்பதிகளை 11ம் திகதி திங்கட்கிழமை இன்று வாழ்த்துவோர் அன்பு அப்பா அம்மா, அன்பு மாமா மாமி, ரஞ்சன் சுமதி குடும்பம், மச்சாள் சயானா, அண்ணா பஞ்சகரன் பிரகலா குடும்பம், அண்ணா கிருபாகரன் கீர்த்திகா குடும்பம் மருமகள் லக்சனா, தங்கைகள் காயத்ரி, பராசக்தி, அண்ணா மிரோஜன் காயத்ரி குடும்பம், மருமகள் ஒலிவியா, தம்பி மிதுஷன், தங்கைமார் நிரோஜா மெலானி மற்றும் உற்றார்மேலும் படிக்க…


நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் – கமல்


“Kavignar Vaaliyin” Vaali 1000 Chat Show | Producer AVM Saravanan


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !