தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிதீவிரம்: ஒரேநாளில் உச்ச பாதிப்பு!
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 645 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மொத்த பாதிப்பு 69 ஆயிரத்து 822ஆக அதிகரித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 956 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அங்கு இதுவரை 49 ஆயிரத்து 690 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று மட்டும் 46 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 957ஆக அதிகரித்துள்ளன. இதில் சென்னையில் மட்டும் ஒரேநாளில் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு மொத்தமாக 730 பேர் மரணித்துள்ளனர்.
இதேவேளை, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து ஆயிரத்து 358பேர் கடந்த 24 மணிநேரத்தில் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 357ஆக அதிகரித்துள்ளதுடன் இது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 55.4 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தமிழகத்தில் இன்று 34ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 10 இலட்சத்து 43ஆயிரம் பேருக்கு பரிசோதனை இடம்பெற்றுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பகிரவும்...